ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் தமிழகத்தில் 9 நாட்கள் வங்கிகளுக்கு
விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து ஞாயிற்றுக் கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகள், பக்ரீத் பண்டிகை ஆகியவை அடங்கும். சில மாநிலங்களில் 12 நாள்கள் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கி மூடப்பட்டிருந்தாலும், NEFT, IMPS, UPI மொபைல் வங்கி செயலிகள் போன்ற டிஜிட்டல் சேவைகள் தொடர்ந்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.