திருநெல்வேலி: பாளையங்கோட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த மாணவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வகுப்பறையில் நடந்த இச்சம்பவத்தை தடுக்க முயன்ற ஆசிரியரையும் மாணவன் அரிவாளால் வெட்டியுள்ளார். அந்த மாணவன் நலமுடன் இருப்பதாகவும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.