லடாக் யூனியன் பிரதேசத்துக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 85% வேலைகள் உள்ளூர் மக்களுக்கே ஒதுக்கப்படும். மேலும், லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் இடங்களில் 3-ல் 1 பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஆங்கிலம், ஹிந்தி, உருது, போட்டி, பர்கி ஆகியவை அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. லடாக் மக்களின் தொடர் போராட்டத்தால் இம்முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.