ஹிமாச்சல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பார்மா நிறுவனத்தில், மீசை மற்றும் தாடி வளர்த்ததற்காக 80 தொழிலாளர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனை எதிர்த்து, மற்ற தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தாடி, மீசையை அகற்ற வேண்டும் என நிறுவனம் நிபந்தனை விதித்தது. அந்த நிபந்தனையை ஏற்று தொழிலாளர்கள் தாடி, மீசையை அகற்றிவிட்டு பணிக்குச் சென்றனர்.