8 பேர் மூளை தொற்றால் உயிரிழப்பு - தனியார் மருத்துவமனைக்கு சீல்

60பார்த்தது
8 பேர் மூளை தொற்றால் உயிரிழப்பு - தனியார் மருத்துவமனைக்கு சீல்
பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருப்பத்தூர் வாணியம்பாடியில் 2023ஆம் ஆண்டு பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தனர். சமீபத்தில் மருத்துவமனையை மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஆய்வு செய்த நிலையில், சீல் தற்போது வைகப்பட்டுள்ளது. பல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவியை அசுத்தமான நிலையில் மருத்துவர் பயன்படுத்தியதே உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி