மகாராஷ்டிரா: புத்ருக் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் ஆம்புலன்ஸுக்கு போன் செய்யப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வேறு இடத்திற்கு சென்றதால் கர்ப்பிணி பெண் இருந்த இடத்திற்கு உடனடியாக வரவில்லை. இதனால் உடல் நிலை மோசமடைந்து அப்பெண் உயிரிழந்ததோடு வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை விசாரிக்கிறது.