சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவிக்கு 11ஆம் வகுப்பு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 22ஆம் தேதியன்று பள்ளி முடிந்த பிறகு 3 மாணவர்களும் சேர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொலை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.