பெட்ரோல் டேங்கர் வெடித்துச் சிதறியதில் 77 பேர் பலி (வீடியோ)

61பார்த்தது
வடக்கு நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்துச் சிதறியதில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜர் மாநிலத்தின் சுலேஜா பகுதிக்கு அருகே நேற்று [ஜன.18] அதிகாலை டேங்கரில் இருந்து மற்றொரு டிரக்கிற்கு ஜெனரேட்டரைப் பயன்படுத்தி பெட்ரோலை மாற்ற முயன்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. இக்கோர விபத்தில் 77 பேர் உயிரிழந்த நிலையில், 56-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி