தமிழகத்தில் 7,535 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெறவுள்ளது. அதன்படி, மொத்தம் 7,535 காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தேச திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 1,915 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலும், 1,205 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.