காசாவில் குழந்தைகள் உட்பட 75 பேர் உயிரிழப்பு

67பார்த்தது
காசாவில் குழந்தைகள் உட்பட 75 பேர் உயிரிழப்பு
காசா பகுதியில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியதில் நிவாரண உதவி பெறுவதற்காக காத்திருந்த 8 பாலஸ்தீனியர்கள் உட்பட 75 பேர் உயிரிழந்தனர். காசா நகரின் சப்ரா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட, காசா முழுவதும் 70க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரின் சப்ரா சுற்றுப்புறத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முஜாஹிதீன் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஷேக் அசாத் அபு ஷரியா கொல்லப்பட்டதை ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி