காஷ்மிரில் பிஎஸ்எஃப் ஐஜி சுஷாங்க் இன்று (மே 28) செய்தியாளர்களை சந்தித்தார். அவர், "ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா நடத்திய போது, பாகிஸ்தானுக்கு எதிராக அதிநவீன ஆயுதங்கள், தானியங்கி ராக்கெட் போன்றவை பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டன. தாக்குதலின் போது 3 இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் பெயர் எல்லையில் உள்ள இரு நிலைகளுக்கு சூட்டப்படும்" என தெரிவித்துள்ளார்.