பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் 7 தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தவிர ஏழை எளியோருக்கு ஒரு லட்சம் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும். தமிழகத்தில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.