இந்தியாவில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மாநிலங்களில் தலா (1), மஹாராஷ்ட்ராவில் 4 பேர் என மொத்தம் 7 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இணை நோய் காரணமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.