கர்நாடகா மாநிலம் ஹோஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிமலிங்கப்பா என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் குலஹல்லி பகுதியில் உள்ள பசவேஸ்வரா கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். வியாஸ்நகரே ரயில் நிலையம் அருகே வந்தபோது அவ்வழியே வந்த டிப்பர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதிவிட்டு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. சேதமடைந்த நிலையில் நின்றிருந்த கார் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 7 வயது சிறுவன், லாரி ஓட்டுநர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.