உத்தராகாண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பித்தோர்கர் பிராந்தியத்தின் தார்ச்சுலா துணைப்பிரிவில் கைலாஷ் மானசரோவர் சாலையில் உள்ள தக்தியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஐடிபிபி மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நிவாரணப் பணிகள் தொடங்கியுள்ளனர். வடமாநிலங்களில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.