மேற்கு ரஷ்யாவில் சனிக்கிழமை இரவு பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உக்ரைனின் எல்லையை ஒட்டிய பிரையன்ஸ்க் பகுதியில் நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் அவசரகால குழுவினரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.