மிக்ஜாம் புயல் - கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி ₹6000 ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த ஏதுவாக விண்ணங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு, விண்ணப்பித்தவர்களின் வங்கிக் கணக்கில் விரைவில் ₹6000 வரவு வைக்கப்டும் என்று அறிவித்துள்ளது.