நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஜன.8) முன்தினம் வடலூரில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சீமான் மீது இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடலூர், கோவை, சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.