ராணுவத்துக்கு உண்டியல் பணத்தை அனுப்பிய 6 வயது சிறுமி

70பார்த்தது
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்துக்கு மத்தியில் இந்திய ராணுவத்துக்கு சிறுமி ஒருவர் தனது உண்டியல் பணத்தை வழங்கியுள்ளார். திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த அரிகரன், அஞ்சலி தம்பதியின் 6 வயது மகள் தாருணிகா, தான் உண்டியலில் சேமித்த பணத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்குமாறு திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் சீனிவாசனிடம் அளித்தார். இதையொட்டி சிறுமிக்கு சால்வை அணிவித்து பாராட்டினார்கள். உண்டியலில் ரூ.2 ஆயிரத்து 390 இருந்தது. பணம் தேசிய பாதுகாப்பு நிதியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி