கர்நாடக மாநிலத்தில் காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தப்பட்டதில் 6 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொம்மலபுரா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நாகராஜூ ரூ. 200 பெற்றுக் கொண்டு அதிக வீரியம் கொண்ட மயக்க ஊசியை போட்டதால் இந்த துயர சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர் மீது நடவடிக்கை கோரி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.