பால்கன் தீபகற்பத்தின் வட மாசிடோனியா நாட்டில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 50 பேர் பலியாகினர். இரவு கச்சேரியில் பங்கேற்க 1,000க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தலைநகர் ஸ்கோப்ஜேயிலிருந்து கிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோகானியில் ஒரு இரவு விடுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. தீ மளமளவென பரவி இரவு விடுதியின் மேற்கூரை முழுவதும் எரிந்து சாம்பலானது.