தமிழ்நாட்டில் வலுக்கட்டாயமாக கடனை வசூலித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடன் பெற்றவர் தற்கொலைக்கு கடன் வழங்கிய நிறுவனம் காரணமாக இருந்தால் அது குற்றமாக கருதப்படும். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் இல்லாமல் கடன் வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.