சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. பகல் 12 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் அதிக கவனம் செலுத்தும். சத்தீஸ்கருக்கு இரண்டு கட்டமாகவும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.