மாமனை கொலை செய்து ஆற்றில் வீசிய அக்கா மகன் உட்பட 5 பேர் கைது

44861பார்த்தது
மாமனை கொலை செய்து ஆற்றில் வீசிய அக்கா மகன் உட்பட 5 பேர் கைது
திருப்பூர்: காங்கேயம் காளிவலசு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சோமசுந்தரம் (80). இவருக்கு மனைவியும், 50 வயதான இரண்டு திருமணமாகாத மகன்களும் உள்ளனர். இவருக்கு 30 ஏக்கர் நிலம் உள்ளது. நிலத்தால் அக்கா மகனுக்கும் இவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இவருடைய நிலத்தை அபகரித்ததாக சோமசுந்தரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 26ஆம் தேதி வெளியூர் செல்வதாக கூறிச் சென்றவர் நள்ளிரவு ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. மறுநாள் மகன் ஜெயபிரகாஷ் போலீசில் புகாரளித்துள்ளார்.

சோமசுந்தரத்தின் அக்கா மகன் கொற்றவேல் மீது சந்தேகமடைந்து போலீசார் விசாரித்தனர். கொற்றவேல், பழனிச்சாமி, சிதம்பரம், முருகேசன், விஜயா, பொன் சங்கர், விசாலாட்சி உட்பட 6 பேர் சேர்ந்து கொலை செய்து நொய்யல் ஆற்றில் வீசியதை ஒப்புக்கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி