தவறான ஊசி போட்டதால் 5 பேர் பலி

72பார்த்தது
ஒடிசா மாநிலத்தின் கோராபுட் மாவட்ட தலைமையகத்தில் உள்ள லட்சுமண நாயக் மருத்துவக் கல்லூரியில், இன்று (ஜூன் 3) ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. தவறான ஊசி போட்டதால் 5 நோயாளிகள் இறந்ததாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவிலி ஒருவர் ஊசி போட்ட 15 நிமிடங்களுக்குள் நோயாளிகள் இறந்துள்ளனர். 3 பேர் ICU-விலும், 2 பேர் பொது வார்டிலும் இறந்தனர். நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி