சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையில் ஏற்பட்ட என்கவுண்டரில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில் முக்கிய தலைவர்கள் சுதாகர், பாஸ்கர் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்களை பாதுகாப்புப்படையினர் கண்டெடுத்துள்ளனர். நேற்றிரவு (ஜூன் 6) நடைபெற்ற சண்டைக்குப்பிறகு 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இன்று (ஜூன் 7) காலை இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.