ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடியில் இருந்து முதுகுளத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் பயணித்த 5 மாத குழந்தை ருத்ரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். படுகாயமடைந்த தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.