15 - 17 வயதுடைய சிறுவர்கள் அரங்கேற்றிய கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் மொராதாபாத்தை சேர்ந்த 12 வயது சிறுமியுடன் பழகி வந்த சிறுவன், சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்கள் நால்வருடன் சேர்ந்து ஐவராக சிறுமியை வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சிறுமிக்கு குடிக்க மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கொடுமை நடந்துள்ளது. வீடியோ வெளியானதன் பேரில் போலீசார் சிறுவர்களை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.