பஞ்சாபில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஜலந்தர் நகரில் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி திடீரென வெடித்ததில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இதில் படுகாயம் அடைந்த யாஷ்பால் காய், ருச்சி, மான்சா, தியா, அக்ஷய் ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மாதிரிகளை சேகரித்தனர்.