தமிழ்நாடு அரசின் முக்கியத் திட்டமான 'நான் முதல்வன்' மூலம் இதுவரை 41.38 லட்சம் மாணவர்களும், 1 லட்சம் விரிவுரையாளர்களும் பயனடைந்துள்ளனர். மேலும், 'உயர்வுக்குப் படி' திட்டம் வழியாக 77,752 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டங்கள் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றன.