அசாம் மாநிலத்தில் கடந்த மே 29-ம் தேதி முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சுமார் 4 லட்சம் பேரை கனமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் பாதித்துள்ளது. முக்கியமாக கச்சார் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு மட்டும் 1.03 லட்சம் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 10,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அரசின் உதவிகள், பாதிக்கப்பட்ட மக்களை சென்று சேருவதில் சிக்கல் நிலவுகிறது.