தமிழகத்தில் 3வது யானை.. விஜய் கட்சிக்கு நெருக்கடி

77பார்த்தது
தமிழகத்தில் 3வது யானை.. விஜய் கட்சிக்கு நெருக்கடி
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தமிழ்நாடு மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று அவரது மனைவி பொற்கொடி தமிழ் மாநில பகுஜன் சமாஜ் (TMBSP) என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த இருகட்சிகளில் கொடிகளிலும் யானை சின்னம் உள்ளது. இதனிடையே விஜய்யின் தவெக இரண்டு யானைகளுடன் கட்சி கொடியை பயன்படுத்தி வருகிறது. பிஎஸ்பி தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், 3வது கட்சியும் யானையை களமிறக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி