இந்தியா முழுவதும் நேற்று (ஜூன் 7) ஒரே நாளில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,755ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 27 பேர் குணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.