தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனச்சந்திரன், திருவள்ளூர் ஆட்சியராக பிரதாப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லுக்கு சரவணன், திருவண்ணாமலைக்கு தர்பகராஜ், நெல்லைக்கு சுகுமார், திருவாரூருக்கு சிவசெளந்தரவள்ளி ஆகியோரை ஆட்சியராக அரசு நியமித்துள்ளது.