சென்னை காசிமேடு பகுதியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 200 படகுகள் நேற்று அதிகாலை கரை திரும்பின. வவ்வால், வஞ்சிரம், சங்கரா, மத்தி, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிகளவு பிடிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அப்போது, ஒரு விசைப் படகில் 300 கிலோ எடையும், 15 அடிநீளமும் கொண்ட ‘ஏமன் கோலா’ என்ற ராட்சத மீன் இருந்தது. இந்த மீனை மீனவர்கள் கிரேன் மூலம் படகில் இருந்து கரைக்கு கொண்டு வந்தனர்.