15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பேரில் 30 வயது ஆசிரியை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. டவுனர்ஸ் குரோவ் சவுத் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை கிறிஸ்டினா ஃபார்மெல்லா கைது செய்யப்பட்டார். 2023-ல் நடந்த இச்சம்பவம் தொடர்பாக சிறுவனும், அவரது தாயும் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அண்மையில் கைதான ஆசிரியைக்கு, பள்ளிக்கு செல்லக் கூடாது, 18 வயதுக்குட்பட்ட யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.