சிக்கிம்: ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாட்டென் மற்றும் லாச்சங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் லக்விந்தர் சிங், லான்ஸ் நாயக் முனிஷ் தாக்கூர் மற்றும் அபிஷேக் லகாடா ஆகிய 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன 9 பேரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.