சேலம்: வாழப்பாடி அருகே மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவைச் சேர்ந்த 7 பேர் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் ஆத்தூர் நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.