தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சி, வேதனையை தருவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் யுவராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 11) வெடிவிபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தனர். இந்த விஷயத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், "அப்பாவித் தொழிலாளர்கள் உயிரிழப்பை தடுக்க பட்டாசு தொழிற்சாலைகளில் உரிய கட்டுப்பாடுகளை செயல்படுத்த வேண்டும்" என அரசுக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.