இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்று 80-வது ஆண்டுகள் நிறைவு பெறுவதை அனுசரிக்கும் விதமாக உக்ரைன் மீதான தாக்குதல் 3 நாட்களுக்கு நிறுத்தப்படும் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த போர் நிறுத்தம் மே 8 முதல் 10ஆம் தேதி வரை 72 மணி நேரத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று உக்ரைனும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.