பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் விரைவாக மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் சிரமத்தை போக்க 2-வது ரோப்கார் அமைக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி கிழக்கு பகுதியில் 2-வது ரோப்கார் நிலையம் அமைக்கப்பட்டு அதற்கான அலுவலகமும் திறக்கப்பட்டது. இந்த பணிக்காக வெளிநாட்டு நிறுவனம் சார்பில் டெண்டர் விடப்பட்ட நிலையில் ரூ.73 கோடிக்கு பணி முடிக்கப்படும் என தெரிவித்தது. ஆனால் ரூ.30 கோடி கூடுதலாக உள்ளது எனக்கூறி 2-வது ரோப்கார் திட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.