சிக்கிமில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு சுற்றுலாவுக்கு சென்ற 2,000-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சாலை வழியாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீட்டு வருகின்றனர். இந்நிலையில்,சாட்டேனில் சிக்கியிருந்த 3 சிறுவர்கள் உட்பட 28 பேரை பேரிடர் மீட்பு படையினர் நேற்று (ஜூன் 8) மீட்டனர்.