24 மணிநேரத்தில் 276 பேருக்கு கொரோனா

65பார்த்தது
24 மணிநேரத்தில் 276 பேருக்கு கொரோனா
இந்தியாவில் ஓமிக்ரானின் மரபணு மாற்றம் பெற்ற JN.1 & NB.1.8.1 கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் மே மாதத்துக்குப்பின்னர் படிப்படியாக கொரோனா அதிகரித்துள்ளது. நேற்று (ஜூன் 3) வரையில் 4026 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இந்நிலையில், இன்று (ஜூன் 4) கடந்த 24 மணிநேரத்தில் 276 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மொத்த கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை 4,302 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி