டயாலிசிஸ் சிகிச்சையின்போது மின்சாரம் தடைப்பட்டதால் 26 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். உத்திரப்பிரதேசம் மாநிலம் பீஜினோரைச் சேர்ந்த இளைஞர் சர்பராஸ் அகமத். டயாலிசிஸ் நோயாளியான அகமத், நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றார். டயாலிசிஸ் செய்துகொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. ஜெனரேட்டரிலும் எரிபொருள் இல்லை. இதனால் இயந்திரம் இயங்காமல் இளைஞர் துடிதுடிக்க பரிதாபமாக உயிரிழந்தார்.