சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் ரூ.600 கோடியில் 25,000 வீடுகள் கட்டித் தரப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 2025-26 பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் அவர், சீரமைக்க இயலாத நிலையில் உள்ள பழைய வீடுகளுக்கு பதில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 6,100 கி.மீ. நீளத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.