தேர்தலில் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை கூட்டணியில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறபோது தான் முடிவு செய்வோம் என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக கூறியுள்ளார். காட்டுமன்னார்கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "தேர்தலுக்கு முன்கூட்டியே இவ்வளவு தொகுதிகள்தான் எங்களுக்கு வேண்டும் என்றெல்லாம் ஒரு நிபந்தனையாக நாங்கள் எப்போதும் வைத்தது இல்லை. வன்னியரசு கூறியது அவரது தனிப்பட்ட கருத்து" என பேட்டியளித்துள்ளார்.