ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கம்

51பார்த்தது
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கம்
திடீர் விடுப்பு எடுத்ததால் 90 விமானங்கள் ரத்தான நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக விடுப்பு எடுத்து விமானங்கள் ரத்தாக காரணமான நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்று(மே 8) திடீரென விடுப்பு எடுத்ததால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 2ஆம் நாளாக ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நாட்களுக்கு சில விமானங்கள் ரத்தாகும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி