தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்றும் 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி அஞ்செட்டி அருகே, N.புதூர் கிராமத்தில் நேற்று (மார்ச்.22) இரவு மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள், ஒரு நாட்டு மாடு உயிரிழந்தது. கால்நடை மருத்துவ அதிகாரி இறந்த ஆடுகளை பரிசோதனை செய்தார். இடி மின்னல் தாக்கி பலியான கால்நடைகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.