உலகக்கோப்பை
கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்குச் சரிந்தது. சென்னையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில்
ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஜடேஜா 3, குல்தீப் 2, பும்ரா 2, அஷ்வின், ஹர்திக், சிராஜ் தலா விக்கெட் வீழ்த்தினர். இரண்டாவதாக களமிறங்கும் இந்திய அணி 200 ரன்களை இலக்காக கொண்டு போட்டியிடுகிறது.