20 வயது இளம் பெண் கொடூர கொலை.. ஒருதலை காதல் காரணமா?

59பார்த்தது
உத்தரப் பிரதேசம்: மொராதாபாத் மைனாதர் பகுதியில் சாய்ரா (20 வயது) என்ற இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை காணாமல் போன சாய்ரா, மறுநாள் காலை வயலில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் கத்தியால் குத்தப்பட்ட ஆழமான காயங்கள் காணப்பட்டன. இந்நிலையில், சாய்ராவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்த ரஃபி என்பவர் மீது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி